jahanmuin. Powered by Blogger.
RSS
Showing posts with label Gslexy Special News. Show all posts
Showing posts with label Gslexy Special News. Show all posts

Black Hole...

விண்வெளியில் காணப்படும் கறுப்பு நிற ஓட்டையால் பெரிய விண்மீன்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியில் இருந்து 29 கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் கூட்டத்தில் கருப்பு நிற ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சியும் மேற்கொண்டனர்.
மேலும் விண்வெளியில் காணப்படும் விண்மீன்கள் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இந்த கருப்பு நிற ஓட்டைகள் மூலம் சிறிய விண்மீன்கள் அழியும் ஆபத்து ஏற்படும்.
தொடக்கத்தில் இருந்தே சிறிய விண்மீன்களை அழிக்கும் கருப்பு நிற ஓட்டை மெல்ல மெல்ல பெரிய விண்மீன்களையும் அழிக்கும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வானில் ஒரே இரவில் தென்படவிருக்கும் ஐந்து கோள்கள்

வானிலுள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிவதில்லை.
இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.
புதன், வௌ்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களே இவ்வாறு ஒரே இரவில் தோற்றமளிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்நிகழ்வானது அனேகமாக பெப்ரவரி 22 தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுள் வௌ்ளி கிரகத்தை வெற்றுக்கண்ணின் ஊடாக நாள்தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரையும், சனி செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாது சூரியன் உதித்து மறையும் காலப்பகுதியில் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலவின் மறு பக்கம்










பூமியின் துணைக் கோளான நிலவின் மற்றொரு பக்கத்தை படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நாசா அனுப்பிய கிரெய்ல் செயற்கைகோள் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது.
இதன் மூலம் பூமியில் இருந்து யாரும் பார்த்திடாத நிலவின் கருமையான முகத்தை நாசா உலகிற்கு வெளியிட்டுள்ளது.
இந்த இருண்ட பகுதி பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS