jahanmuin. Powered by Blogger.
RSS
Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

One minute please…

ஒரு வங்கியின் கிளை .
உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.
தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.
...
அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.
மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோஎன்று இரைந்து விட்டு,அலுவலகம் வந்து விட்டார்.
நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.
காலையிலிருந்து மூன்று குழம்பி குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.
இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.
இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

(
இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)
அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.
ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.
இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.
காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.

(
ஷாட் கட்-அடுத்த ஷாட்!)
அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!
காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.
காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.
வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.

அதெப்படி சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்எனச் சொல்கிறார்.
காசாளர் சொல்கிறார்நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாதுவார்த்தை தடிக்கிறது.
காசாளர் முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.
வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.
முடிவு எப்படியிருக்கும்?இதைத் தவிர்த்திருக்க முடியாதா?முடியும். எப்படி?காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.
(
அல்லது)
வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்முடியாதா?முடியும்.
நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்

By

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த “பூஸ்ட்” வேண்டுமா?

படைப்பாற்றல், கலைஞர்கள், இசை வல்லுநர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு மட்டும் உரியதன்று. மாறாக, சாதாரண மக்களாலும் தவிர்க்க முடியாதது. நம் எல்லோரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் என்னும் மகத்தான ஆற்றல் உள்ளது.
உளவியல் நிபுணரான ராபர்ட் ஜெ.ஸ்டெர்ன்பெர்க் என்பவர், “படைப்பாற்றலானது, எந்த அளவிற்கு அசலாக இருக்கிறதோ; அதே அளவிற்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கிறார். அவரது கூற்றுப்படி, படைப்பாற்றலானது சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி மாத்திரம் அன்றி, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறது.
படைப்பாற்றலை மேம்படுத்த விரும்புபவர்களுக்கு இதோ சில எளிமையான குறிப்புகள்.

1.
உங்களுக்குள் ஒளிர்விடும் படைப்பாற்றலை நீங்களே மேம்படுத்துங்கள்!
படைப்பாற்றலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துவதே இதற்கான மிகச்சிறந்த வழியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்தவோ தவிர்க்கவோ வேண்டாம். இலக்குகளை அமைத்து, அதற்கு வேண்டிய பிற தேவைகளைப் பட்டியலிடுவதன் மூலம் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். தினம் தினம் இதை ஒரு பயிற்சியாகவே மேற்கொள்ளலாம்.

2.
படைப்பாற்றலில் வல்லுநராகுங்கள்!
பிரச்சனையின் அல்லது உங்களுடைய புதிய படைப்பு ஒன்றின் தலைப்பை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்வது, படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன்மூலம் குறித்த அந்தத் துறையில் சிறந்த வல்லுநராக விளங்க வாய்ப்பு ஏற்படும். நாவல், சினிமா உள்ளிட்ட எந்தவொரு படைப்பாக்கத்திற்கும் இது உதவும்.

3.
ஆர்வத்துடன் கூடிய உங்கள் ஆற்றலுக்கான வெகுமதி!
படைப்பாற்றலை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஏற்படும் பொதுவான தடையானது, உங்கள் வெற்றியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது. உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாக விளங்கி, செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், ஆர்வத்துடன் கூடிய படைப்பாற்றல் மூலமான வெற்றியும் அதற்கான வெகுமதியும் உறுதியாகிவிடுகிறது.

4.
படைப்பாற்றலுக்கான வெகுமதி, எதிர்பார்ப்பைத் தாண்டியும் ஏற்படும்!
உங்களுக்குள் உள்ள படைப்பாற்றலானது கொடுக்கப்போகும் வெகுமதி என்னவென்று, படைப்பாளரான உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனினும் சில நேரங்களில் அதன் பலன் எதிர்பாராத அளவில் மிகப்பெரியதாக அமைவதோடு தொடர்ந்து நிலைக்கவும் செய்கிறது. இதன்மூலம் படைப்பாற்றலுக்கு பலன் உண்டு என்பது புலனாகிறது.

5.
சிறந்த படைப்பாற்றலுக்காக எத்தகைய இடர்பாட்டையும் எதிர்கொள்ளல்!
உங்கள் ஆற்றல்களைக் கொண்டு படைப்பாற்றலை மேம்படுத்துகையில், ஏதேனும் இடர்களை எதிர்கொள்ள நேருமானால், அதற்கு உங்களை தயார்படுத்துவது அவசியம். உங்கள் முயற்சி எப்பொழுதுமே வெற்றியை நோக்கி இட்டுச்செல்லாது. எனவே, எதிர்காலத்தில் மிகச்சிறந்த படைப்பாளியாக விளங்க, திறமைக்கும் ஆற்றலுக்கும் தடையாக உள்ளவற்றை வென்று உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாக விளங்குங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருமண வாழ்க்கை சிறக்க

திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.
ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.

பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றது. கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் இதர பிரச்னைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது.
மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர் வீட்டார் கூறும் பொய்களும் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.
இதேபோல குடும்பத்திற்கு ஒத்து வராத பெண், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளாத பெண், ஊதாரித்தனம், பல ஆண்களின் சகவாசம், குடும்பத்திற்கு அடங்காத பெண் போன்றவை ஆணின் முன் நிற்கும் முக்கிய காரணியாக இருக்கின்றன.
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்: பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும்.
இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே(கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

விட்டு கொடுங்கள்: இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும்.
இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நீதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.

ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்பு/ அரவணைப்பு: ஒரு நாளைக்கு ஒரு முறையாவது I LOVE YOU சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS