jahanmuin. Powered by Blogger.
RSS

விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும்.  
உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணணியில் சேமித்து பின் வழமையான முறையில் உங்கள் கணணியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கூகுள் பிளசில் Translate வசதி

கூகுளால் உருவாக்கப்பட்ட கூகுள் பிளஸ் இணையத்தளம் பேஸ்புக்கிற்கு போட்டியாக அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது.
மேலும் பயனாளர்களை அதிகமாக கவர்வதற்காக கூகுள் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. அந்த வரிசையில் கூகுளின் மிகச் சிறந்த சேவையான Google Translate வசதியை கூகுள் பிளஸ் தளத்தில் கொண்டு வரலாம்.
கூகுள் பிளசில் Translator வசதியை கொண்டு வர:
இதற்கு முதலில் Google Translate for Google+ இந்த லிங்கில் கிளிக் செய்து நீட்சியை குரோம் உலவியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு கூகுள் பிளஸ் தளத்தை ஓபன் செய்து பாருங்கள், ஒவ்வொரு பதிவிற்கும் முடிவில் Translate என்ற லிங்க் வந்திருக்கும்.
அதனை கிளிக் செய்தால் அந்த பதிவு Default Language-ஆக எதை தெரிவு செய்துள்ளோமோ அதற்கு மாறிவிடும்.
Default Language மாற்ற:
நீட்சியின் மேல் மவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து Options என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் உள்ள Language என்ற பகுதியில் உள்ள மொழியை உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து கொள்ளவும் மற்றும் மொழி மாற்றத்தின் பின்புற நிறத்தையும் இதில் தெரிவு செய்து கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் போதும் ஞாபகார்த்தமாக பிடிக்கப்படும் புகைப்படங்களை எல்லோரும் தமக்கு பிடித்த வண்ணங்களில் மாற்றி வடிவமைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
இதற்காக அதிகளவில் கணணி மென்பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு புகைப்படங்களை வடிவமைக்க பிரபல்யமான எத்தனை மென்பொருட்கள் காணப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய பல வசதிகளுடன் வெவ்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
அந்தவகையில் தற்போது பல்வேறு வசதிகளுடன் piZap எனும் புதிய புகைப்பட வடிவமைப்பு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஓன்லைனில் வைத்தும் நாம் புகைப்படங்களை வடிவமைக்க முடிவதுடன், மென்பொருளாக தரவிறக்கம் செய்து கணணில் நிறுவியும் கொள்ளலாம்.
இதன் மூலம் வண்ணமயமான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் படங்களை ஒன்றிணைத்தல், பின்னணிகளை மாற்றியமைத்தல், மேலதிக ஒப்பனை செய்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
                                                                       Download linkடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS